சென்னை:
ப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்துக்கு வந்த சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இருந்ததை அதிமுக என ஒற்றுமையாக மாற்றிய எனக்கு எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் தாய் உள்ளத்தோடு செயல்பட யாரும் இல்லை என்றும் கூறினார்.