கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் கோயம்புத்தூரில் மளிகை, காய்கறி கடைகள், டீ கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், டாஸ்மாக், உணவகங்கள் ஆகியவற்றுக்குக் கடந்த 2 முதல் 4ஆம் தீதி வரை நேரக்கட்டுப்பாடுகளும், மால்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு (ராயல் நகர் சந்திப்பு, ரைஸ் மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருத்துவம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க விதிக்கப்பட்ட தடைகளும் நீடிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.