சென்னை

ன்று நாடெங்கும் மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் இதோ

இன்று நாடெங்கும் மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது/   இந்த தேர்வு  பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி 20 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது.  மாணவர்கள் தேர்வு அறையில் 1.15 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.  தேர்வு அறைக்குள் 1.30 மணிக்குள் நுழைய வேண்டும்.

தேர்வு குறித்த அறிவிப்பு மற்றும் நுழைவு சீட்டு சரிபார்த்தல் 1.30 மணி முதல் 1.45 மணி வரை நடைபெற உள்ளது.  சரியாக 1.45 மணிக்கு வினாத்தாள் விநியோகிக்கப்பட்டு 1.50 மணிக்குத் தேர்வர்கள் தங்கள் விவரங்களை வினாத்தாளில் எழுத வேண்டும்   தேர்வு சரியாக 2 மணிக்குத் தொடங்கி 5.20 மணிக்கு முடிவடைய உள்ளது.

தேர்வில் மொத்தம் கேட்கப்படும் 200 கேள்விகளில் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வெண்டும்.   மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.  தேர்வர்களின் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.   ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் தலா 1 மதிப்பெண்கள் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.