தமிழக அரசின் ஒப்புதலுக்காக காரைக்கால் துறைமுகத்தில் காத்திருக்கும் மலேசிய மணல்

Must read

காரைக்கால்

லேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட 54000 டன் ஆற்று மணல் தமிழக அரசின் போக்குவரத்து அனுமதிக்காக காத்துக் கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் கட்டுமான வேலைகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தமிழக மற்றும் புதுவை அரசுகள் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மணலை சேமிக்க, இடம் மாற்ற மற்றும் விற்பனை செய்ய அனுமதி வழங்கும் பொறுப்பை பொதுப்பணித்துறைக்குத் தமிழக அரசு அளித்துள்ளது. இதே நேஅர்த்தில் புதுவை அரசு தனியார் மற்றும் தனியார்  நிறுவனங்களுக்கு ஆற்று மணலை இறக்குமதி செய்து விற்க அனுமதி அளித்துள்ளது.

இதையொட்டி புதுவையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மலேசியாவில்  இருந்து மணல் இறக்குமதி செய்துள்ளது. சுமார் 54,692 டன் எடையுள்ள ஆற்று மணல்  மலேசியாவின் பேகன் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு ஒரு கப்பல் மூலம் கடந்த மே மாதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மணலை பாண்டிச்சேரி எடுத்துச் செல்ல தமிழக சாலைகளின் வழியாக செல்ல வேண்டும். ஆனால் அரசு இதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து காரைக்கால் துறைமுக அதிகாரி, “இந்த மணல் கடந்த மே மாதம் இடையில் காரைக்கால் துறைமுகத்துக்கு வந்தது. சுங்கத்துறையினர் இந்த மணலுக்கு அனுமதி இரு வாரங்களில் அளித்தனர். அத்துடன் புதுச்சேரி அரசு இந்த மணலை இங்கிருந்து எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. இந்த மணல் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் ஒப்பந்ததாரரால் வாங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கட்டுமான வேலைக்காக இந்த மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்ல தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மூலம் மட்டுமே வழி உள்ளது; தற்போது இந்த அனுமதியைத் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அளிக்காததால் இந்த மணல் துறைமுகத்தினுள்  கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக உள்ளது. இதற்கு அனுமதி அளிக்காதது ஏன் எனத் தெரியவில்லை”எனக்கூறி உள்ளார்.

இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்துச் சொல்ல மறுத்துள்ளனர்.

More articles

Latest article