சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெண்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு உள்ளதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு  பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்  வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மத்திய பாஜக அரசு, இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுவரை 5முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்து  சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச்சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாக  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். புதிதாக அமையும் அரசு ஜூலை மாதத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்த முறை அவர் தாக்கல் செய்துள்ள  இடைக்கால பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதுடன்,  2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு  பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்:

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. 2014-ல் நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது. சப்கா சாத், சப்கா விகாஸ் மூலம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அந்த சவால்களை முறியடித்தது என்று  பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகள் முன்னோடியில்லாத வளர்ச்சியின் ஆண்டாக இருக்கும் என்றும், 2047-க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைய வேண்டும் என்றும் கூறினார்.

பட்ஜெட்டில் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது நடுத்தர மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நிதி ஒருங்கிணைப்பு, உள்கட்டமைப்பு, வேளாண்மை, பசுமை வளர்ச்சி மற்றும் ரயில்வே ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது.

2024-25ம் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் FY24 இலக்கு 5.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதற்கிடையில், நிதியாண்டின் 25ஆம் நிதியாண்டின் இலக்கு இலக்கு 11.1 சதவீதம் அதிகரித்து ரூ.11.1 லட்சம் கோடியாக இருந்தது.

இந்த முறை,  பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது.  மத்திய அரசு கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், தற்போது 4 சதவீத உயர்வில் ரூ.6.25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன் முத்தலாக் தடை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், பிரதமர் ஆவாஸ் யோஜனா உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் உயர்கல்வி பயிலும் விகிதம் 28% அதிகரித்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

மத்திய அரசு ஏற்கனவே லாக்பதி தீதி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்றுவது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை 3 கோடியாக உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு எப்போதுமே சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற பெண்கள் முன்னேறுவதை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் 9 கோடி பெண்களை உறுப்பினர்களாக கொண்ட 83 லட்சம் சுய உதவிக்குழுக்கள் கிராமங்களில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளன என  தெரிவித்தார்.

தற்போதைய சூழலில், பெண்கள்  அதிகளவில் STEM பாடங்களில்  கவனம் செலுத்தி வருவதாக கூறியவர்,  பெண்கள் என்றால் ஆசிரியர் , வங்கி பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலை மாறியுள்ளது என்றார்.

 நாட்டில் STEM என குறிப்பிடப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த பாடங்களில் மேற்கல்வி பயில்பவர்களில் 43% மாணவிகள். இது உலகிலேயே அதிகம் என்றும் இதன் மூலம் பணியிடங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்   70% வீடுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

உலகளவில் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இதனை தடுக்க 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.

மத்திய அரசு ஆயுஷ்மாச்ன் பாரத் திட்டம் மூலம் மக்களுக்கு மருத்துவ காப்பீட்டினை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பனியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விரிவுபடுத்தப்படும் என கூறினார்.

இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், கடந்த 10 ஆண்டுகளில், வரி வசூல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு வரிக் கணக்குகளின் சராசரி செயலாக்க நேரம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் மூலதனச் செலவீனத்தை மூன்று மடங்காக உயர்த்தியதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பங்கு வகித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான செலவு 11.1 சதவீதம் அதிகரித்து 11.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாகும்.

பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் வசதியை மேம்படுத்த 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கு இணையாக மாற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார்.

மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் உள்ளிட்ட முக்கிய ரயில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். மேலும், 3 முக்கிய ரயில்வே வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டன. துறைமுக இணைப்பு காரிடார், எரிசக்தி, கனிம மற்றும் சிமென்ட் காரிடார் மற்றும் அதிக போக்குவரத்து அடர்த்தி காரிடார் ஆகியவை ஆகும்.

பிரத்யேக சரக்கு வழித்தடங்களுடன், இந்த மூன்று பொருளாதார வழித்தட திட்டங்களும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, தளவாடச் செலவுகளைக் குறைக்கும் என்றார் சீதாராமன்.

ரூஃப்-டாப் சோலாரைசேஷன் மூலம், 10 மில்லியன் குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும். இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.15,000-18,000 வரை சேமிக்க முடியும் என்றவர், 2070க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உற்பத்தி மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பை ஆதரிப்பதன் மூலம் மின்சார வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு மின்-பஸ்களை அதிக அளவில் ஏற்றுக்கொள்வது கட்டண பாதுகாப்பு வழிமுறைகள் மூலம் ஊக்குவிக்கப்படும்.

உலக அளவில் சுற்றுலா சின்னங்களாக திகழும் இடங்கள் குறித்த சுற்றுலா மையங்களின் பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றின் விரிவான வளர்ச்சியை மேற்கொள்ள மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

முதலீடுகளை ஊக்குவித்தல்

2014-23 ஆம் ஆண்டில் 596 பில்லியன் டாலர்கள் அந்நிய நேரடி முதலீடு ஒரு பொற்காலத்தைக் குறிக்கும். இது 2005-14ம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். நீடித்த அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, ‘முதலில் இந்தியாவை மேம்படுத்துங்கள்’ என்ற பெயரில் முதலீடுகள் பெறப்படும்.

புதிய கால தொழில்நுட்பங்களும் தரவுகளும் மக்கள் மற்றும் வணிகங்களின் வாழ்க்கையை மாற்றுகின்றன. அவை புதிய பொருளாதார வாய்ப்புகளை செயல்படுத்தி, அனைவருக்கும் குறைந்த விலை உயர்தர சேவைகளை வழங்க உதவுகின்றன.

உள்பட ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.