டில்லி:

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க கோரி ‘இம்பிச்மென்ட்’ தீர்மானம் கொண்டு வர காங்கிஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடுவிடம்  அளித்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த 20ந்தேதி   துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இந்த மனுகுறித்து ஆய்வு செய்து வந்த வெங்கையாநாடு, மனுவை நிராகரித்துள்ளதாக தலைநகர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி இருக்கும்,  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை பணியிடை நீக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய மனுவில்  காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட  7 கட்சிகளை சேர்ந்த  71  எம்பிக்கள் கையெழுத்திட்டு  மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து கட்சி தலைவர்கள்  கொடுத்திருந்தனர்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இம்பீச்மென்ட் நோட்டீஸ் குறித்து வெங்கையாநாயுடு   சட்ட நிபுணர்களுடன்  ஆலோசனை நடதினர். மேலும்,  அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே. பராசரன் ஆகியோருடனும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மேலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை வெங்கய்ய நாயுடு சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தீபக்மிஸ்ரா மீதான இம்பபீச்மென்ட் தீர்மானத்தை, துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு  தள்ளுபடி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கையாநாயுடு, தீபக் மிஸ்ரா குறித்து  எதிர்க்கட்சி கூறி உள்ள 5 குற்றச்சாட்டுகளையும்  என் மனதைப் பதியவைத்துள்ளேன், மேலும் அத்துடன்  இணைக்கப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தேன். மேலும் இந்த விஷயத்தில் தலைமை நீதிபதியின் நடத்தையில், அவரை குற்றவாளியாகக் கருதப்படக்கூடிய  எந்தவொரு நியாயமான விஷயமும் இல்லை என்று கூறி உள்ளார்.