சென்னை: முந்தைய திமுக ஆட்சி காலத்தில், ஒய்வுபெற்ற  காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை  சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்தவர் ஜாபர் சேட். அப்போது, பல உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் கருப்புபணம் விளையாடி இருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, கடந்த மாதம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர்   ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று (ஜூலை 27ந்தேதி) சென்னையில் உள்ள . அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பெரியசாமி ஆஜரானார்.  அவரிடம் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் சுமார் 7  மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  முற்பகல் 11 மணியளவில் ஆஜரான பெரியசாமியிடம்,  தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேல் அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வெளியே வந்ததும், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சட்டத்துக்கு கட்டுப்பட்டு விசாரணைக்காக இன்று ஆஜரானேன்.விசாரணை அணுகுமுறை பற்றி எந்த கவலையும் இல்லை. நான் உறுதியாக உள்ளேன். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது விசாரணை நடத்துகிறார்கள். சென்னையில் ஒரு சதுர அடி நிலம் கூட எனக்கு இல்லை. நான் சட்ட விரோதமாக எந்த செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை. அடுத்த கட்டமாக விசாரணை எப்போது இருக்கும் என தற்போது கூற முடியாது. எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன். நீதிமன்றத்தில் சந்திப்போம்” என கூறினார்.

இந்த சமயத்தில் 2007-2008-ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்தில் அப்போது ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் தற்போது விசாரணை நடத்தி உள்ளன