சென்னை: அமெரிக்க அருங்காட்சியகத்தில் 10ம் நூற்றாண்டின் செம்பியன் மகாதேவி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதை  தமிழகம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டின் கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகள், வெவ்வேறு நாடுகளின் அருங்காட்சியங்களை அலங்கரித்து வருகிறது. அதை தமிழ்நாட்டுக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சியில், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்னர்.

இந்த நிலையில்,  கடந்த 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட  செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி என்பது வரலாறு. இந்த சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிலை கடுத்தல் தடுப்பு பிரிவினர், தற்போது, நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிலை கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சேர்ந்த 1000 வருடத்திற்கும் மேல் பழமையான உலோக சிலையாகும். 10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப்பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி என்பது வரலாறு. செம்பியன் மகாதேவி உலோக சிலையை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.