தான் இசையமைத்த திரைப்பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து எஸ்.பி.பி., “இந்த சட்டநடைமுறை குறித்து எனக்குத் தெரியாது. இனி இளையராஜா இசையில் உருவான பாடல்களை… நான் பாடியது உட்பட.. மேடையில் பாடப்போவதில்லை.

அதே நேரம் நண்பர் இளையராஜா, தனது எண்ணத்தை என்னிடம் நேரடியாக தெரிவித்திருக்கலாம். வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஆகவே அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இளையராஜாவின் நடவடிக்கையை விமர்சித்து சமூக வலைதலங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

அவற்றில் சில பேஸ்புக் பதிவுகள்:

 

வாசுகி பாஸ்கர்· 

மேடை கச்சேரிகளில் தன் பாடலை பாட ராயல்டி வேண்டுமென்று இசைஞானி இளையராஜா எஸ்பி.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நோட்டிஸ்

இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர், ஆகி பாவலரின் தம்பிகள், எம். எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி, கேவி மஹாதேவன் போன்றோரின் பெரும்பாலான பாடல்களை கச்சேரிகளில் பாடி தான், பிறகு முழு வீச்சில் சினிமாவுக்கு வந்தவர்கள். சினிமாவுக்கு வந்ததிற்கு பிறகும், கங்கை அமரன் கச்சேரி பண்ணாத ஊர்கள் இல்லை.

இந்திய ஆடியோ துறையில் தற்போதைய நிலவரப்படி, வெஸ்டர்ன் நாடுகளை போல, மேடை கச்சேரிக்கெல்லாம் பணம் கேட்கும் அளவு, purest form ஆப் ராயல்ட்டி பேசுவதற்கு யாருக்கும் முழு உரிமை இல்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர்

சர்ர்ரி. இளையராஜாவும் உலகம் பூரா இசைக் கச்சேரிகள் நடத்தியிருக்கிறார். எஸ்பிபி பாடிய பாடல்களும் அதில் அடக்கம். அதற்கான ராயல்டியை எஸ்பிபிக்குக் கொடுத்திருக்கிறாரா?

Sharmila Nagarajan

இளையராஜா பிரச்சனை..
SPB பாடக்கூடாது என இளையராஜா நோட்டீஸ் அனுப்பிஉள்ளாராம்.
அது சரி…
ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் மட்டும் எப்படி உரிமை கோரமுடியும்..
இது ஒரு கூட்டுப்பணி.
இளையராஜா… SPB … பாடலாசிரியர்…
உள்பட எவரும் திரைப்பட தயாரிப்பாளரிடம் செய்யும் வேலைக்கு கூலி வாங்கிவிடுகிறார்கள்…
மார்க்கெட் குறைவான காலங்களில் ஓரளவு தொகையும்..
மார்க்கெட் உச்சத்தில் இருந்தால் வாயில் வந்த தொகையை கேட்டு வாங்கியும் தன் பணியை செய்கிறார்கள்..
அப்படி
இருக்கும்போது..
ஏற்கனவே கூலிவாங்கிவிட்ட ஒரு வேலைக்கு
இளையராஜா
தன் இசைக்கு உரிமை கோர முடியாது….
…….
இவர் ஒன்றும் இலவசமாக சமூக சேவை செய்யவில்லை…
அதோடு ஒரு பாடலுக்கு இவர் மட்டுமே முழு காரண/ காரிய கர்த்தா இல்லை..
இவரின் பங்கு கால் பாகமே..
……
மேலும் எவரோ போட்ட முதலுக்கு இவர் பங்கு போட முயல்வது அவலமானது…

ராமன் கோகுல்

இளையராஜா ஏன் இப்படி இருக்கிறார்?

தன்னைவிட எஸ்.பி.பி. புகழ் பெறுகிறாரே என்கிற ஆத்திரத்தில் எஸ்.பி.பி. போலவே பாடும் மனோவை கொண்டுவந்தார். இது மிகத் தவறு.

சுந்தர்

இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளியில் புகழ் பெற்ற பாடல் “மச்சானை பார்த்தீங்களா” முதல் பட படங்களில் கிராமிய இசையை அப்படியே எடுத்து கையாண்டிருப்பார். முதல் மரியாதை படத்திலும் இப்படித்தான். இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

காலம் காலமாக மக்களிடையே புழங்கி வரும் இந்த இசை மெட்டுக்களை திரைப்படங்களில் பயன்படுத்தும்போது “இசை கோர்ப்பு” என்று தன் பெயரை போட்டுக்கொள்ளலாம். ஆனால் இளையராஜாவோ “இசை” என்றே போட்டுக்கொண்டார்.

ஆனால் இவர்தான் இப்போது தனது இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களைக்கூட, மேடைகளில் பாடக்கூடாது என்று சட்டம் பேசுகிறார்.

கோவிந்த்

இளையாராஜாவின் முடிவு சட்டப்படி சரியாகவே இருக்கட்டும். எஸ்.பி.பி. சொன்னது போல, நீண்ட கால நண்பரான அவர், நேரடியாகவே எஸ்.பி.பியிடம் இதை தெரிவித்திருக்கலாமே!