அகத்தியன்

“எத்தனையோ ஸ்வரங்களை இசைத்த ஞானம் (இளையராஜா) அபஸ்வரம் இசைப்பது எனக்கு ஆச்சரிமில்லை” என்று பிரபல திரைப்பட இயக்குநர் அகத்தியன் தெரிவித்துள்ளார்.

வான்மதி, காதல் கோட்டை, கோகுதலத்தில் சீதை,விடுகதை உட்பட பல தமிழ்த்திரைப்டஙக்ளை இயக்கியவர் அகத்தியன். தரமான திரைப்படங்களை அளித்த இவர் சிறந்த இயக்குநர் என்று மட்டுமின்றி சிறந்த திரைக்கதை ஆசரிரியர் என்றும் அறியப்படுபவர்.  இவர் திரைக்கதை எழுதி இயக்கிய காதல்கோட்டை திரைப்படம், தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. சிர்ஃப் தும் என்ற இந்தித் திரைப்படத்தையும் அகத்தியன் இயக்கியிருக்கிறார்.

இளையராஜா

இளையராஜா, தான் இசைமயைத்த  திரைப்பாடல்களை பாடக்கூடாது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்தான் தற்போது  திரைப்பட வட்டாரத்தில் மட்டுமின்றி, சமூகவலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக உள்ளது.

பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வந்தாலும் திரைத்துறையிலிருந்து எவரும் கருத்து சொல்லவில்லை. இந்த நிலையில் இயக்குநர் அகத்தியன், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ““எத்தனையோ ஸ்வரங்களை இசைத்த ஞானம் (இளையராஜா) அபஸ்வரம் இசைப்பது எனக்கு ஆச்சரிமில்லை”” என்கிற அர்த்தத்தில் கருத்து பதிந்துள்ளார்.

அந்த பதிவு..

அந்த பதிவு:

“அது ஒரு நீண்ட செய்தியாக அமையும். அவருடைய இசை வாழ்வில் எங்கோ ஒரு மூலையில் சொட்டிய நீர்த்துளி நான். இருப்பினும் ஒரு “க்ளக்” ஓசை உண்டு. இப்போது வன்மமாய்த் தெரியும்.அன்புடன் ஒரு நாளில் பிரியமாய்ப் பகிர்கிறேன்.

ஒன்று மட்டும் இப்போது.

ஏனோ இசை, ஞானி ஆகாமல் ஆதி யோகி ஆகி விட்டது.

எத்தனையோ ஸ்வரங்களை இசைத்த ஞானம் அபஸ்வரம் இசைப்பது எனக்கு ஆச்சரியமில்லாத ஒன்று.

பின்பு, பின்னொரு தருணத்தில், வாழ்க்கை அனுமதிக்கும் போது.

அன்புடன் நான்” – இவ்வாறு இயக்குநர் அகத்தியன் பதிவிட்டுள்ளார்.

திரையுலகைப் பொறுத்தவரை.. குறிப்பாக இசைத்துறையைப் பொறுத்தவரை முக்கியமான இந்த விவகாரம் குறித்து அத்துறையைச் சேர்ந்த எவரும் கருத்து  தெரிவிக்காத நிலையில் அகத்தியனின் கருத்து பல தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அகத்தியன், பாடலாசிரியரும்கூட என்பது குறிப்பிடத்தக்கது.