கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவின் நியு ஜெர்ஸி நகரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.   அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து மீண்டு அமெரிக்கா பறக்கிறார் இளையராஜா.
illayaraja-story_647_081615014704
கலாலயா  என்ற அமைப்பு, வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறது.  மொத்தம் ஆறு  நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இசை கச்சேரி நடைபெறவுள்ளது.
இதில் இளையராஜாவின் ஸ்பெஷல்  இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.  அவர் ஆயிரம்  படங்களுக்கு இசையமைத்திருப்பதை கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.