சென்னை:
புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது வலியை மறக்க இளையராஜாவின் பாடலை கேட்ட பெண்ணை இளையராஜா நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சீதா லட்சுமி கர்நாடக சங்கீத ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஒருக்கட்டத்தில் புற்றுநோயின் வீரியம் முற்றியதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இவர் அப்போலோ கேன்சர் சென்டரில் உள்ள மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையின் வலியை தாங்கிக்கொள்ள இளையராஜா பாட்டை பாடியுள்ளார்.

இது உலகவில் பயங்கர வைரலானது. பின்னர் சிகிச்சை முடிந்து நலமாக சீதாலட்சுமி வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவர் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீதாலட்சுமி பேசியபோது, புற்று நோயிலிருந்து குணமடைந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதலில் எனக்கு சிகிச்சை செய்து கொள்வதற்கு மிகவும் பயமாக இருந்தது. பின்னர் அறுவை சிகிச்சைக்கு சென்ற போது மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில் வலியை எப்படி தாங்குவது என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது.

பின் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் வலியை தாங்கிக்கொள்ள என்னைப் பாட சொன்னார்கள். நான் பாடல் ஆசிரியராக இருந்ததால் இசைஞானி இளையராஜாவின் ‘கற்பூர பொம்மை’ ஒன்று என்ற பாடலை பாடினேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவ நிர்வாகம் இளையராஜாவின் தீவிர ரசிகையான சீதாலட்சுமியை இசைஞானி இளையராஜாவுடன் சந்திக்கச் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது