ஐ.ஐ.டி வளாக நேர்முகத்தேர்வு நடத்த பிளிப்கார்ட்-க்கு அனுமதி மறுப்பு ?

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

ஐ.ஐ.டி வளாகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர்களை  பணிக்கு எடுக்கும் வேலைவாய்ப்பு திருவிழாவின் முதல் நாளில் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம்.
வலைத்தள வர்த்தகத்தில் ஜாம்பவனாகத் திகழும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இதுவரை நேர்முகத் தேர்வில் மாணவர்களைத் தேந்தெடுக்க மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முதல் நாளிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. முதல் நாளில் தான் திறமையான மற்றும்  முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை வேலைக்கு எடுக்க முடியும். ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடும் என்றே தெரிகின்றது.

IITஅனைத்து ஐ.ஐ.டி வளாக வேலைவாய்ப்பு முகாமின் முதல் நாள் மாணவர்களைத் தேந்தெடுக்கும் வாய்ப்பை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு மறுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த முறை வேலைக்கு தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு ஜூன் 2016ல் அனுப்ப வேண்டிய பணி நியமன ஆணை அனுப்புவதை டிசம்பர்-2016க்கு ஒத்தி வைத்து மிகுந்த தாமதம் செய்வதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக ஐ ஐ டி களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்களின் மாணவர்கள் இன்னமும் பிளிப்கார்ட்டில் வேலை செய்துவருகின்றனர். எனவே இதுபோன்ற அதிரடி முடிவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த விசயத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டியுள்ளது” என பெயர் குறிப்பிட விரும்பாத ஐஐடி நேர்முகப்தேர்வு பொருப்பாளர் கூறினார்.
சொமாடோ (ZOMATO)எனும் நிறுவனம் உரிமையாளர் சென்ற ஆண்டு தன் கம்பெனிக்கு நேர்முகத்தேர்வு நடத்த முதல் நாளில் வாய்ப்பு தராததால் டிவிட்டரில் தனது கோபத்தை பதிவுசெய்திருந்தார். அதனை அடுத்து அனைத்து ஐ.ஐ.டி.ய்லும் அவரது நிறுவனம் நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ள தடை செய்ய்யப்பட்டது. அதுபோன்றதொரு நிலை பிளிப்காட்டிற்கு வராது.
பிளிப்பார்ட் நிறுவனம் இந்தத் தாமதத்திற்கு நஷ்டஈடாக 1.5 லட்சம் தருவதாக மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளது. எனினும் மாணவர்கள் நஷ்டஈடு தொகையை உயர்த்தித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் தம்மால் தேர்ந்தேடுக்கப்பட்ட மாணவர்களை கண்டிப்பாக பணிக்கு எடுத்துக்கொள்வதாகவும் ஆனால் நஷ்டஈடு தொகையை உயத்தித்தர முடியாது என்றும் பதில் அளித்துள்ளது.
ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஏம் களில் இவ்வாறு செய்துள்ளதால் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெயருக்கு மிகுந்த களங்கம் ஏற்பட்டு உள்ளது.

ஐ.ஐ.டி. சென்னை நேர்முகத் தேர்வுக்கு காத்திருக்கும் மாணவர்கள்.

இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனம் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள விளக்கக்த்தில், ” முறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்களுக்கு பணிநியமன ஆணை அனுப்புவதில் தாமதம் ஏற்படுகின்றது. எனினும் கண்டிப்பாக டிசம்பருக்குள் அனைவரையும் பணியில் அமர்த்திவிடும் நம்பிக்கையுள்ளது என்று தெரிவித்துள்ளது.

More articles

Latest article