புதுடில்லி: மோடி அரசில் நாட்டின் முன்னேற்ற பணிகள் ஏதும் நடக்கவில்லை; குறிப்பாக வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை, பொருளாதார வளர்ச்சியில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி  அடுக்கடுக்கான குற்றம்சாட்டுக்களை தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான அரசு  இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், அந்த ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சியின்  மூத்த நிர்வாகிகள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன் கார்கே , கபில்சிபல் ஆகியோர் கூட்டாக இன்று பத்திரிகையாளர்களைச்  சந்தித்து கருத்து தெரிவித்தனர்.
a
அவர்கள் தெரித்ததாவது:
“மோடி அரசு , தொடர்ந்து பொய்களைத்தான் சொல்லி வருகிறது. அரசு பணிகள் ஏதும் நடக்கவில்லை. மோடியின் செயல்பாடுகள் அனைத்தும் பேச்சளவிலேயே உள்ளன . செயல்பாடுகள் ஏதும் திருப்தி அளிக்கவில்லை.
அவரது ஆட்சியில் துதி பாடுவதுதான் நடக்கிறது.  வேலை வாய்ப்புகள்  உருவாகவில்லை. 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி உறுதி அளித்தார். இதில் சிறிதளவுகூட  கூட முன்னேற்றம் இல்லை.
அரசு திட்டங்கள் மற்றும் திட்டக் கமிஷன் பெயர் மாற்றப்பட்டுள்ளதே தவிர பயன் ஏதும் இல்லை. இது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனை.
கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா- பாக்., எல்லையில் ஆயிரம் அத்துமீறல்கள் நடந்துள்ளன. மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. மோடி அரசு குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம், சீர்குலைந்துள்ளது. உற்பத்தி குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி , இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கி நடைமுறை, வெளியுறை கொள்கை அனைத்தும் தோற்றுவிட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் கேள்விக்குரியதாக உள்ளது” –  இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.