டெல்லி

ந்தியாவின் பிரபல ஐஐடிகளில்  (தொழில்நுட்ப கல்லூரி) ஒன்றான ரூர்கேலா ஐஐடி பேராசிரியர் ஒருவர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து அறியும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இந்த சாப்ட்வேர் மூலம் கொரோனா நோயாளியின் எக்ஸ்ரேவைக் கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து 5 நொடிகளில் அறியமுடியும் என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய ரூர்க்கி பேராசிரியர், இன்று இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அறிய ஒரு சாப்ட்வேரை உருவாக்கி இருப்பதாகவும்,  இதற்காக 40 நாட்கள் தான் கடுமையாக உழைத்ததாக தெரிவித்து உள்ளர்.

இந்த மென்பொருள் குறித்து ஐசிஎம்ஆர் சோதனைக்கு அனுப்பியதாகவும், ஆனால், அங்கிருந்து எந்தவொரு ரிப்ளையும் வராத நிலையில், மீண்டும் மறுஆய்வுக்காகவும், காப்புரிமைக்காகவும் ஐசிஎம்ஆரை அணுகியிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய ரூர்க்கி  நிறுவனத்தின் சிவில் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியரும், இந்த அரிய சாப்ட்வேரை உருவாக்கியவருமான  கமல் ஜெயின் , இந்த மென்பொருள் சோதனை செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல், சுகாதார நிபுணர்களுக்கு வெளிப்படும் அபாயத்தையும் குறைக்கும்.

ஆனால், இதுவரை, எந்த வொரு மருத்துவ நிறுவனம் தனது ஆய்வுகளை  சரிபார்க்கவில்லை என்று வேதனை தெரிவித்து உள்ளார்.

இந்த  மென்பொருள் மூலம் கொரோனா வைரஸ், நிமோனியோ, காசநோய்  இடையே ஏற்படும் வேறுபாடு அறிய முடியும் என்றும், இதற்காக அவர் சுமார்  . 60,000 க்கும் மேற்பட்ட எக்ஸ்ரே ஸ்கேன்களை ஆராய்ந்த பின்னரே,  செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தரவுத்தளத்தை உருவாக்கினேன் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த சாப்ட்வேர் மூலம்  நோயாளிக்கு நிமோனியாவின் ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என்பதை மென்பொருள் வகைப்படுத்தாது, அது கொரோனா வைரஸ் காரணமாக இருக்கிறதா என்று சொல்ல முடியும். அல்லது பிற பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றின் தீவிரத்தை அளவிடவும். முடிவுகளை ஐந்து விநாடிகளுக்குள் செயல்படுத்த முடியும் “என்று அவர் கூறினார்.

ஏற்கனவே  நெல்லையை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானி நமச்சிவாயம் கணேச பாண்டியன் (ஜப்பானின் கியோட்டோ பல்கலை மருத்துவர்) உத்ரகாண்ட் ..டி.. ரூர்க்கி பல்கலை செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானி பாலசுப்பிரமணியமும் இணைந்து, கொரோனா தொற்றை குறுகிய நேரத்தில் கண்டறியும்ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜன்ஸ்எக்ஸ்ரே தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

அதுபோல கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள..எஸ்., டெக்னாலஜிஸ்நிறுவன முதன்மை செயல் அலுவலர் ரமேஷ். தாங்களும் கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிப்பு தொடர்பாக புதிய டெக்னாலஜியை உருவாக்கி இருப்பதாகவும், இதன்  மூலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை 20 நொடிகளில் கண்டறிய முடியும் என தெரிவித்து உள்ளார்.

மத்திய, மாநில அரசுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அதே சமயத்தில், இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ந்தால், வருங்காலங்களில் இதுபோன்ற தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாமே…