சென்னை: சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பருவத் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.

மே 10ம் தேதி நடைபெற வேண்டிய இறுதிப் பருவத் தேர்வுகளை ஐஐடி ஒத்தி வைத்துள்ளது. பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்தல் நடைபெறும் தேதி கொரோனா பரவல் குறைந்த பிறகு, அறிவிக்கப்படும் என்றும் ஐஐடி சென்னை அறிவித்துள்ளது.
மே 3ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற வேண்டிய பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது. சென்னை பல்கலைக்கழகமும் தமது ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மே 17ம் முதல் பருவத் தேர்வுகளை நடத்த சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்து வேறொரு நாளில் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel