உலகில் சிறந்தகல்லூரிகளில் பெங்களூரு IISc க்கு 8வது இடம்- ஆய்வறிக்கை

Must read

பெங்களூரு, 

 சிறந்த பல்கலை கழக வரிசையில் பெங்களூரு இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 8 ஆவதாக இடம்பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

பிரபல டைம்ஸ் ஹையர் எஜூகேசன் என்ற கல்வி பத்திரிகையின் ஆசிரியர் சீடா பர்ட்வா உலகளவில் சிறந்த சிறிய பல்கலைகழகங்களை கல்வித் தரத்தை ஆய்வு செய்து  சிறந்த 10 பல்கலை கழகங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

இதில் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்  இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் Normale Supérieure  இரண்டாம் இடத்திலும், École Polytechnique நான்காம் இடத்திலும், École Normale Supérieure de Lyon ஏழாவது இடத்திலும் உள்ளன.

இதேபோல் இத்தாலியை சேர்ந்த   Scuola Normale Superiore di Pisa  என்ற பல்கலை கழகம் ஐந்தாவது இடத்திலும், Scuola Superiore Sant’Anna என்ற பல்கலை கழகம் ஆறாவது இடத்திலும் உள்ளன. பத்தாவது இடத்தை   Free University of Bozen-Bolzano பல்கலைக் கழகம் பிடித்துள்ளது.

சிறு பல்கலை கழகங்கள் என்பவை 5 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கவேண்டும், அதநேரம் கல்வித் தரத்திலும் ஆய்வு அடிப்படையிலும் சிறந்து விளங்கவேண்டும்.

More articles

Latest article