சென்னை: காவல்துறை ஐஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர்  ஆகியோரை தமிழ்நாடு அரசு இடமாற்றம்  செய்து உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி மூண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் காவல்துறை மற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஏராளமான காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும்  இரண்டு  காவல்துறை ஐஜிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, ஐஜிக்கள்  கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஐஜி கண்ணன் ஐபிஎஸ் மதுரை தெற்கு பகுதி ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஐஜி நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு பகுதி காவல்துறை ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.