மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி காரணமாக, தூத்துக்குடி எஸ்பி. உள்பட 3 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து,  தென்மண்டல ஐஜியாக முருகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  தூத்துக்குடி எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசார ணைக்கு சென்ற நீதிபதியை மிரட்டியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் புகார் கூறப்பட்ட நிலையில், மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகளின் உத்தரவைத் தொடர்ந்து,  தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதிதாக தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்ட  முருகன் மீது ஏற்கனவே பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. அதுபோல  புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட ஜெயக்குமார் மீது குட்கா வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்படத்தக்கது.