புதுடெல்லி: இந்திய வெளிநாட்டுப் பணி(ஐஎஃப்எஸ்) அதிகாரி விவேக் குமார், பிரதமரின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; பிரதமர் தலைமையில் இயங்கும் நியமனங்களுக்கான கேபினட் கமிட்டி, விவேக் குமாருக்கான புதிய பொறுப்பு குறித்த இறுதி முடிவை எடுத்தது. அவர் தற்போது பிரதமர் அலுவலகத்தின் இயக்குநராக இருக்கிறார்.

விவேக் குமார் என்று தனது புதிய பணியில் சேர்கிறாரோ, அன்றிலிருந்து அவரின் நியமனம் நடைமுறைக்கு வரும். அடுத்த உத்தரவு வரும்வரை அல்லது ஒப்பந்தம் முடிவுறும் வரை, எது முன்னதாக வருகிறதோ, அதுவரை தனது பணியில் நீடிப்பார் விவேக் குமார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.