
26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட Innovative Film Acadamy ( IFA) சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ” நெடுநல்வாடை ” திரைப்படம் விருதை பெற்றுள்ளது .
பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியாகி ” நெடுநல்வாடை ” மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்டது.
விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் , தமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் இது. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.
Patrikai.com official YouTube Channel