சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை காண வருபவர்கள், கட்டாயம் ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த கர்நாடகா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, பெலகாவி மாவட்டத்தில் உள்ள இண்டல்கா, பல்லாரி, மைசூரு ஆகிய மத்திய சிறைச்சாலைகளில் துவங்கி சிறிய சிறைச்சாலைகள் வரை அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் கர்நாடக டிஜிபி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் ‘‘சிறையில் உள்ள கைதிகளை காண வருபவர்களின் ஆதார் அட்டை வாங்கி அதன் எண்ணை வருகை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இனி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரனை பார்க்க வேண்டும் என்றாலும், ஆதார் அட்டை அவசியம் தேவை என்று கர்நாடக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.