டில்லி,

இ-விசா எனப்படும் மின்னணு விசாக்கள் பெற்ற வெளிநாட்டு பயணிகள் இனி இந்தியாவில் 2 மாதங்கள் தங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெளிநாடு பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த பயணி களின் எண்ணிக்கைய உயர்ந்தவும் ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் மத்திய அரசு  2014ம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.

தற்போது இந்த இ-விசா கொள்கையில் தளர்த்தப்பட்ட சில உத்தரவுகள் இந்த மாதம் (ஏப்ரல்) ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி இ-விசா பெற்ற வெளிநாட்டுப் பயணிகள் 2 மாதங்கள் தங்கி இருக்கலாம்.

பழைய விசா முறையில் 1 மாதம் மட்டுமே தங்க முடியும். தற்போது விசா கொள்கையில் தளர்வு ஏற்படுத்திய தொடர்ந்து மேலும் 1 மாத காலம் தங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வரும் பயணிகள் ஒரே விசாவில் காலக்கெடு முடிவதற்குள் மூன்று முறை நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் இதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் இந்தியாவில் இருந்து அண்டை நாடு களுக்கும் சுற்றுலா சென்று விட்டு மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப முடியும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டு பயணிகள் நான்கு நாட்களில் இந்தியாவிற்கு சென்று வர விசா பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.