டில்லி,

ங்கிகளில் இனிமேல் 50ஆயிரம்  ரொக்கமாக பணம் டெபாசிட் செய்தால் தங்களது ஒரிஜினில் ஐடி கார்டு சரிபார்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு  பண மதிப்பிழப்பு அறிவித்தபிறகு பல்வேறு நடவடிக்ககைளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வங்கிகளின் வட்டி விகிதம், குறைந்த பட்ச பண இருப்பு, பண பரிமாற்றம்  போன்றவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ரூபாய் 50ஆயிரத்திற்கும் மேல் வங்கிகளில் ரொக்கமாக டெபாசிட் செய்தால், கண்டிப்பாக பான் எண் மற்றும் ஒரிஜினல் ஐடி கார்டு சரிபார்க்க வேண்டும் என  மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இது சிறு வியாபாரிகள் மற்றும் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு காரணமாக, பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு, அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறியும் நோக்கில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.