டில்லி

ராஜ்தானி எக்ஸ்பிரசில் ஏசிI மற்றும் ஏசி II ஆகிய டிக்கட்டுகள் கன்ஃபர்ம் ஆகவில்லை எனில் அவர்களுக்கு விமான டிக்கட் அளிக்க யோசிக்கப்பட்டுள்ளது.

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசிI மற்றும் ஏசி II டிக்கட் புக் செய்து கன்ஃபர்ம் ஆகாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   அதே நேரத்தில் அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா விமானம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.   ராஜதானி எக்ஸ்பிரசின் ஏசிI மற்றும் ஏசி II டிக்கட் விலைக்கும் விமான டிக்கட்டுகள் விலைக்கும் அதிக வித்தியாசமும் இருப்பதில்லை.

இதையொட்டி சென்ற வருடம் கோடைக்காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் அப்போதைய தலைவர் அஷ்வானி லோகானி ராஜஸ்தானி ரெயிலில் அந்த கன்ஃபார்ம் ஆகாத பயணிகளை ஏர் இந்தியா விமானத்துக்கு மாற்றலாம் என ஒரு கோரிக்கையை இந்திய ரெயில்வேக்கு வேண்டுகோள் விடுத்தார்.  அந்த வேண்டுகோள் அப்போது நிராகரிக்கப்பட்டது.

தற்போது இந்திய ரெயில்வேயின் தலவரகா அஷ்வானி லோகானி மாற்றப்பட்டுள்ளார்.  லோகானி அதே கோரிக்கையை தற்போதைய ஏர் இந்தியா தலைவர் திரும்ப கோரினால் தாம் அதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.   ராஜதானி எக்ஸ்பிரசின் ஏசிI மற்றும் ஏசி II டிக்கட் விலைக்கும் விமான டிக்கட்டுகள் விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதால் இந்த யோசனையை ஏற்கலாம் என மீண்டும் கூறி உள்ளார்.

ஆனால் தற்போது ஏர் இந்தியாவின் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள ராஜிவ் பன்சாலி “இப்படி ஒரு விவரத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை.  ரெயில் டிக்கட் நிச்சயமாக விமான டிக்கட்டை விட குறைவான விலையாகவே இருக்கும்.  இது தேவையற்ற நஷ்டத்தை ஏற்படுத்தும் என கூறி உள்ளார்.