சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், பலர் ஃபேஸ்புக்கிற்கு அடிமையாகி கடமையை மறப்பர், காலத்தை விரயம் செய்வர். அத்தகைய சூழ்நிலையில், ஃபேஸ்புக் கணக்கைத் தற்காலிகமாக முடக்கிவைப்பர். சிலர் நிரந்தரமாய் நீக்கிவிடுவர்.

பல்வேறு காரணங்களுக்காகத் தங்கள் கணக்கை முடக்க நினைத்து அதனை எப்படி செய்வதெனத் தெரியாமல் முழிக்கின்றீர்களா? இதனைப் படியுங்கள்……
ஒருவழியாய், உங்கள் பேஸ்புக் கணக்கை இருந்து நீங்கள் நிரந்தரமாக நீக்கிவிட முடிவெடுத்து விட்டீர்களா ?
ஒரு முறை நிரந்தரமாய் நீக்கப்பட்ட ஒரு அக்கவுண்ட் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்க.
நிரந்தரமாக உங்கள் பேஸ்புக் கணக்கை நீக்கப் பின்வறும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

1. படத்தில் காட்டியுள்ளது போல் முதலில், வலதுபுற உச்சியில் உள்ள நோட்டிஃபிகேசன் அடுத்து உள்ள உதவி கேள்விகுறி பக்கத்தில் உள்ள கீழ் அம்புக்குறியை சொடுக்கவும்.
2. படத்தில் உள்ளது போல் தங்கள் செட்டிங்க்ஸ் சொடுக்கவும்.
3. படத்தில் காட்டியுள்ளது போல் “செக்யூரிட்டி” யை கிளிக் செய்யவும்.
4. படத்தில் உள்ளது போல், “டீஆக்டிவேட் யுவர் அக்கவுன்ட்” அருகில் உள்ள “எடிட்” என்பதை கிளிக் செய்யவும்.
5. படத்தில் உள்ளது போல், “ டீஆக்டிவேட் யுவர் அக்கவுன்ட்” என்பதை சொடுக்கவும்.

6. படத்தில் உள்ளது போல் “கடவுச்சொல்லை டைப் செய்து “சமர்ப்பிக்கவும்.
7. படத்தில் உள்ளது போல், “அதர்(other) (வேறு எந்த காரணத்தைக் கிளிக் செய்தாலும், தங்களுக்கு இலவசமாய், பல ஆலோசனைகள் வழங்கப்படும்) என்பதை கிளிக் செய்யவும்.
காரணமாக “தனிப்பட்ட காரணங்களுக்காக (due to personal reason)” என டைப் செய்யவும். நம் முன்னாள் தமிழக முதவர் பன்னீர்செல்வமே “தனிப்பட்ட காரணம்” என்று கூறிதான் முதல்வர் பதவியை ராஜினாம செய்தார். கவர்நரும் அதனை ஏர்றுக்கொண்டார். அதன் பிறகு தமிழகத்தில் “பிரேக்கிக் நியூஸ்” காலம் நடந்து வருகின்றது. எனவே நீங்கள் மேற்சொன்னவற்றை கிளிக் செய்யவும்.
8. படத்தில் உள்ளது போல், “டீ ஆக்டிவேட்” என்பதை கிளிக் செய்யவும்.
இறுதியாக, பேஸ்புக் உங்கள் கணக்கின் நீக்கத்தை செயல்படுத்தும் நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளது என்றும், 14 நாட்களுக்குள் உங்கள் கணக்கு நிரந்தரமாய் நீக்கப்படும் என்றும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ஒருவேளை, இந்தப் 14 நாட்களுக்குள், நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்வீர்களேயானால், எந்த சிக்கலுமின்றி, வழக்கம்போல் நீங்கள், உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்திய ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும். ஆனால், 14 நாட்கள் கழித்து உங்கள் கணக்கு நிரந்தரமாய் முடக்கப்படும். உங்களின் தகவல்கள், முழுவதையும் நீக்க 14 முதல் 90 நாட்கள்வரை ஆகலாம்.

இவ்வாறு முடக்கிவிட்டு, மனதை மாற்றிக்கொள்ளாமல் 14 நாட்கள் “ஃபேஸ்புக் வராத” விரதத்தை மேற்கொள்வீர்களேயானால் தங்கள் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும்.