சென்னை: மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால் கடும் நடவடிக்கை எனப்படும் என்றும், ரூ. 2 லட்சம் வரை  அபராதம் விதிக்கப்படும் என சென்னைவாசிகளுக்கு  சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ன்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று மழைநீர் வடிகால் பணியை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன் படி கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி ஆணையர் ஆய்வின்போது பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகாலில் கழிவு நீர் கலப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி உட்பட்ட மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கழிவுநீர் கலப்பவர்களுக்கு ஐந்தாயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்குமாறு அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

குறிப்பாக வீடுகளிலிருந்து கழிவுநீர் மழை நீர் வடிகாலில் கலந்தால் அவர்களுக்கு 5 ஆயிரமும், தனியார் நிறுவனங்களில் இருந்து கலந்தால் அவர்களுக்கு 10 ஆயிர மும், சிறப்பு தனியார் நிறுவனங்களுக்கு 50 ஆயிரமும், சிறப்பு குடியிருப்பு பகுதிகளிலிருந்து கழிவுநீர் கலந்தால் 25 ஆயிரமும், பல்லடுக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் கலந்தால் 2 லட்சமும், பல்லடுக்கு குடியிருப்பில் இருந்து கழிவு நீர் கலந்தால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் வறப்பட்டுள்ளார்.