நாமக்கல்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

நாமக்கல் சாலப்பாளையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. காளை அடக்கும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு ஆகும். கலாச்சார அடையாள விளையாட்டும் கூட. இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் எதிர்பாராதவிதமாக காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி காப்பீடு செய்து கொடுப்படும். காளைகளுக்கும் காப்பீடு செய்யப்படும்” என்றார்.

முன்னதாக, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அதிக காளைகளை பிடித்து சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
[youtube-feed feed=1]