மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில், தற்போது கேப்டனாக இருக்கும் டிம் பெய்னேவின் பதவி காலம் முடிந்தவுடன், ஸ்டீவ் ஸ்மித் அப்பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றுள்ளார் அந்த அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் உஸ்மான் குவாஜா.

சுமார் 3 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநடத்திய ஸ்மித், பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் சிக்கியதற்காக அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குவாஜா பேசியுள்ளதாவது, “ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக ஸ்மித் ஆக விரும்பினால், அவருக்கு கட்டாயம் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவர் நமது நம்பர்-1 பேட்ஸ்மேன். அவர் இதற்கு முன்பாக கேப்டனாக இருந்துள்ளார்.

அவர் தனது தவறுகளுக்கான தண்டனையை அனுபவித்துவிட்டார். எனவே, அவர் விரும்பினால், அவருக்கு அந்தப் பொறுப்பைக் கொடுப்பதில் எந்த தவறும் கிடையாது” என்றுள்ளார் அவர்.