மும்பை
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப் பொருள் சர்க்கரையாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தின் போது போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளி ட்ட 20 பேர் கைதாகினர். .
தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கான் தமக்கு ஜாமீன் கோரி அளித்த மனுவை நீதிமன்றம் இருமுறை நிராகரித்துள்ளது. இதையொட்டி அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். தம்மை வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைக்க அதிகாரிகள் முயலுவதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் பாஜகவுக்கு எதிராகக் கருத்துச் சொல்வதால் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் கருத்து உள்ளது. இது குறித்து மகாராஷ்டிர அமைச்சர் சஹாஜன் புஜபால், “இந்த வழக்கு வேண்டுமென்றே புனையப்பட்டது போல் தெரிகிறது. அனேகமாக ஷாருக்கான் பாஜகவில் இணைந்து விட்டால் இந்த போதைப் பொருள் சர்க்கரையாக மாறிவிடும்” எனக் கூறி உள்ளார்.