பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வரும் 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள சிந்தகி, ஹனகல் ஆகிய தொகுதிகளுக்கு வரும 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தல் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக விளங்கும் எனக் கூறப்படுகிறது.

இங்கு வெற்றி பெற அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  தற்போது இந்த தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய 3 கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கி உள்ளன. 

முதல்வர் பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற பிறகு வரும் முதல் தேர்தல் என்பதால் அவர் பாஜகவை வெற்றி பெறச் செய்ய முழு வீச்சில் களம் இறங்கி உள்ளார்.   அவருக்கு எதிராக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா  மற்றும் குமாரசாமி உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.