10 ரூ. நாணயங்களை வாங்காவிட்டால் புகார் அளிக்கலாம்

Must read

மிழகம் முழுவதும் ரூ.10 நாணயங்கள் செல்லாது என வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வாங்க மறுத்து வருகின்றனர்.

மேலும் பேருந்துகளில் பயணத்தின்போதும் ரூ.10 நாணயங்கள் வாங்க நடத்துனர்கள் மறுப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.

ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து ரூ.10 நாணயங்கள் செல்லுபடியாகும் எனவும், வாங்க மறுத்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தும் இதுபோன்ற புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், பேருந்து நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் பயணிகள் புகார் அளிக்கலாம் என சேலம் போக்குவரத்து கழக மேலாளர் பாண்டி தெரிவித்துள்ளார்.

மேலும் 9487977300, 9487997400 என்ற பிரத்யேக எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற வசதியை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article