டில்லி,
செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை விதிக்கும் வகையில் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 30ந்தேதிக்கு பிறகு ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள்  நோட்டுக்களை வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 8ந்தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு குறித்து அறிவித்தபோது, டிசம்பர் 30ந்தேதி வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.