கேரள தங்கநகை கடன் நிறுவனங்களிடம் மலைபோல குவிந்து கிடக்கும் தங்கம்

Must read

கேரளாவைச் சேர்ந்த மூன்று தங்கநகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் உலகின் முன்னேறிய நாடுகளின் கைவசம் இருக்கும் தங்கத்தைவிட அதிக அளவு தங்கநகை கையிருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னேறிய பணக்கார நாடுகளான ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிங்கப்பூர் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளிடம் இருக்கும் தங்கத்தைவிட கேரளாவைச் சேர்ந்த முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் மற்றும் முத்தூட் பின்கார்ப் ஆகிய நிறுவனங்களிடம் அதிகம் தங்கம் கையிருப்பில் இருக்கிறதாம். இந்த மூன்று நிறுவனங்களிடமும் இருக்கும் தங்கத்தின் அளவு 263 டன் ஆகும்.
இதில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் வசம் 65.9 டன்னும், முத்தூட் பின்கார்ப் வசம் 46.88 டன்னும் கைவசம் உள்ளன. இம்மூன்று நிறுவனங்களிடமும் கூட்டாக மொத்தம் 262.78 டன் தங்கம் உள்ளது.
ஆஸ்திரேலிய அரசிடம் 79.9 டன்கள் தங்கமும், சிங்கப்பூர் அரசிடம் 127.4 டன்களும், ஸ்வீடன் அரசிடம் 125.7 டன்கள் தங்கமும் உள்ளது. குவைத்திடம் 79 டன்னும், டென்மார்க்கிடம் 66.5 டன்னும், பின் லாந்திடம் 49.1 டன்னும் தங்கம் கையிருப்பில் உள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை தங்கம் என்பது முக்கிய முதலீட்டுப் பொருள் ஆகும். சர்வதேச அளவில் இந்தியாவில் தங்கம் விற்பனை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Kerala’s largest gold loan cos hold more gold than Belgium or Australia

More articles

Latest article