சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் , சி.வி.சண்முகம்,

தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏதேனும் திட்டம் நிறைவேறினால் அதை முதலில் எதிர்ப்பது அதிமுகதான் என எச்சரிக்கை விடுத்தார்.

பாஜகவின் பினாமி அரசு என அதிமுகவை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையும், மத்திய அரசை மிரட்டும் விதமாக பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று கூறி உள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசை குறித்து, கருத்து தெரிவிக்காமல்  வந்த முதலமைச்சர் எடப்பாடி, காவிரி மேலாண்மை விஷயத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என பேசியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வராவிட்டால்,  மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக எதிர்த்து வாக்களிக்கும் என்று பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.

இந்நிலையில், அதிமுக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏதேனும் திட்டம் நிறைவேறினால் அதை முதலில் எதிர்ப்பது அதிமுகதான் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பாஜகவுக்கு எதிரான பேச்சு தமிழக பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.