டில்லி: 

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அணியில் இருந்த கழற்றி விட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி  அவராகவே ஓய்வு பெற்றால் நல்லது, இல்லையேல், அவர் அணியின் ஆட்டத்தில் கலந்துகொள்வதில் இருந்து தவிர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று முடிந்த உலக கோப்பை தொடரில், தோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லாத நிலையில், அவர்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பிக அரையிறுதி போட்டியின்போது, நியூசிலாந்து அணியுடன் ஆடிய போட்டியில், தோனி ரன் அவுட் ஆனது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தோனி ஓய்வு பெறுங்கள் என சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வந்தனர்.

இதுகுறித்து கூறிய தோனி, நான் எப்போது ஓய்வு பெறுவேன் என எனக்கே தெரியவில்லை என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், தோனியை  இந்திய அணியில் இருந்து கழற்றிவிட  பிசிசிஐ முடிவு செய்து உள்ளதாகவும், அவராக விலகினால் சரி, இல்லையேல் நடைபெற உள்ள போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படுவதில் இருந்து தவிர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.

தோனி இந்திய அணியின் கேப்டனராக இருந்தேபோது, உலக கோப்பை, டி.20 உலக கோப்பை உள்பட பல கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார்.  இந்த நிலையில், அவர் ஓய்வு பெறுவது நல்லது என்றும்,  இனி அவர் எந்த சாதனையும் செய்வதற்கு இல்லை என்பதால் அவர் ஓய்வு பெறுவது நல்லது என்றும் பிசிசிஐ கருதுகிறது.

தோனி ஓய்வுபெற்றால்தான், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம்பெற முடியும் என்ற நிலை உள்ளதால், இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தோனியிடம் இது குறித்து பேசுவார்கள் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.