டேராடூன்:

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்படும் என்று உத்தர காண்ட் மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. இது ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தகாண்ட் மாநிலத்தில் மாணவர்களின் கல்வி தரத்ததை மேம்படுத்த கடந்த ஜூலை மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில்,  மாணவர்களுக்கு  சரியான முறையில் பாடம் எடுக்க தவறும் ஆசிரியர்கள், அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தால், குறையக் காரணமான அந்த ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று  அம்மாநில கல்வித்துறை எச்சரித்து உள்ளது.

பாரதியஜனதா கட்சிஆட்சி செய்து வரும் உத்தகாண்ட் மாநிலத்தின் கல்வித்துறை இயக்குனர், ஆர்.கே.குன்வர்  மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாகவது,

பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேர்ச்சி சதகிதம் குறையக் காரணமான ஆசிரியர்களை அடையாளம் கண்டு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

வரும் நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்பும் இந்த அறிக்கையில் குறிப்பிடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து தேர்ச்சி விகிதம் குறைந்தால், அந்த ஆசிரியர்கள் கட்டாய பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மாநில அரசின் இந்த எச்சரிக்கையை எதிர்த்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க  ஆசிரியர்களின் சங்கங்கள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில்,   பல மாதங்களாக பள்ளிப் பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் உள்ள குமாவ்ன் பகுதியின் 26 ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது,

இந்த விவகாரம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.