மூன்றாவது டி-20 போட்டியையும் வென்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா!

Must read

மெல்போர்ன்: இலங்க‍ை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், டி-20 தொடரை முழுமையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்று, தொடரையும் இழந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் இருந்தது.

ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பேக் கொடுக்கவில்லை ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இலங்க‍ை அணிக்கு குசால் பெரரா மட்டும் கைக்கொடுத்தார். அவர் 45 பந்துகளில் 57 ரன்களை அடித்தார்.

அவிஷ்கா ஃபெர்ணான்டோ 20 ரன்களும். ராஜபக்சா 17 ரன்களும், குசால் மெண்டிஸ் 13 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே அடித்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் ஃபின்ச் 37 ரன்களும், டேவிட் வார்னர் 57 ரன்களும், டர்னர் 22 ரன்களும் அடிக்க, 17.4 ஓவர்களிலேயே, 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி, வெற்றியையும் எட்டியது ஆஸ்திரேலிய அணி.

இதன்மூலம் இலங்க‍ை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை, முழுமையாக ஒயிட்வாஷ் செய்து வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

More articles

Latest article