சென்னை,
மாவட்ட செயலாளர் பதவியில் தன்னை டிடிவி தினகரன் நீக்கியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா சிறையில் இருக்கும்போது, அவர் அனுமதியோடு அறிவிப்பதாக டிடிவி அறிவித்து வருகிறார் என்றார்.
மேலும், ஸ்டாலின் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் முதல்வர் நாற்காலி கடையில் கிடைத்தால் நானே வாங்கி கொடுத்துவிடுவேன் என்றும் கூறினார்.
அதிமுகவில் நடைபெற்று வரும் உச்சக்கட்ட குழப்பம் காரணமாக, எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.
மேலும், எடப்பாடி ஆதரவாளர்களின் கட்சி பதவியை பறித்து, அந்த பதவியில் தனது ஆதரவாளர்களை நியமனம் செய்து வருகிறார்.
சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய டிடிவி, தற்போது, கொள்கை பரப்பு செயலர் பதவியிலிருந்து தம்பிதுரை நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு தங்கதமிழ்செல்வன் நியமனம் செய்யப்படுவதாகவும், அதேபோல் நாகை மாவட்ட செயலர் பதவியிலிருந்து அமைச்சர் ஓஎஸ் மணியனை நீக்கியும் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அவர், கட்சி அலுவலகம், கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை யார் பயன்படுத்துகின்ற னரோ அவர்களே உண்மையான அதிமுக என தெரிவித்தார். முதல்வர் எடப்பாடியை பதவியில் நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.
மேலும், அதிமுகவினரை நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உள்ளது, அப்படியிருக்க சிறையில் இருக்கும் சசிகலாவால் எப்படி அனுமதி வழங்கியிருக்க முடியும் என ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.எஸ்.மணியன், முதல்வர் நாற்காலி கடையில் விற்கப்பட்டால் நானே வாங்கி ஸ்டாலினுக்கு கொடுத்துவிடுவேன் என்றும் கூறினார்.