ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர், “ஆங்கிலப்படம்”. புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கித்தில், ஹீரோ ஹீரோனும் புதுமுகங்கள்தான்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நான் சினிமா துறைக்கு வர முக்கிய காரணம் என்று சொன்னால் அது ராதாரவி அண்ணன் தான்!” என்றவர், “
நான் ஹீரோவாக நடிக்கலாமா என கேட்டதற்கு ஏலே, முட்டாப்பயலே அப்படி எல்லாம் பண்ணாதடா. நீ பாட்டுக்கு ஹீரோவாக நடித்து சினிமா துறையை கெடுத்துடாதடா, உனக்கு காமெடி தான் செட் ஆகும் என்று ராதாரவி சொன்னார்.
திரும்பவும் அவரது வீட்டிற்கு சென்று அண்ணே நான் வில்லனாக நடிக்கட்டுமா என கேட்டென்.
அதற்கும் அவர் என்னை திட்டினார்.
ஒருவேளை பொறாமையில் இப்படி சொல்கிறாரோ என்று நினைத்தேன்” என்று பவர் ஸ்டார் சொல்லி முடிக்க… கூட்டத்தில் பெரும் ஆரவாரம்.
Patrikai.com official YouTube Channel