நாக்பூர்

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு மகாரஷ்டிராவில் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது/

நாட்டின் பல இடங்களிலும், பசு பாதுகாப்புக்காக பல தனி மனித தாக்குதல்கள் நடை பெற்று வருவது தெரிந்ததே.  இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும்,  எதிர்த்தாக்குதலும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நாக்பூரில் நடந்த ஒரு விழாவில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பிரமுகரான அஜய் நில்தாவர், “பசுக்களின் பாதுகாவலர் என்னும் பெயரில் பலர் தனி மனித தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர்.  இதை தடுக்க மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் நாங்கள் மூன்று முறை சந்தித்து பேசினோம்.   சந்திப்பில் அனைத்து பசுப் பாதுகாவலர்களுக்கும் அடையாள அட்டை வழங்குவது என்றும்,  அவர்களின் பெயர், விவரங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தீர்மானைக்கப்பட்டது.   அதன்படி விரைவில் அடையாள அட்டைகள் வழங்கப்படும்   இதன் மூலம் சமூக விரோதிகள் பசு பாதுகாவலர்களிடையே ஊடுருவுவது தடுக்கப்படும்” என கூறினார்.