சென்னை:

படுக்கை வசதியோடு கொண்ட அதிகவேக ரயிலை (ட்ரைன் 20 போன்று) தயாரிக்க வேண்டுமென, சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையை (ஐசிஎஃப்) ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஸ் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைக்கு வருகை தந்த ராஜேஸ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அனைத்து நாடுகளுடனும் தொழில் ரீதியான நட்புறவை இந்தியா கடைபிடித்து வருகிறது.

இந்திய தொழில் நுட்பம் அனைத்து நாடுகளாலும் வரவேற்கப்படுகிறது. மற்ற நாடுகளுக்கும் ரயில் பெட்டிகளை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம்.
ஐசிஎஃப் இதுவரை 3,200 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டைவிட 1,000 பெட்டிகள் அதிகமாகும்.

ட்ரைன் 19 அதிவிரைவு ரயில் இங்குதான் உருவானது. 2019-20 ம் ஆண்டுகளில் இரவு நேரத்திலும் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு, படுக்கை வசதியுடன்கூடிய ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான முகாந்திரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.