19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில்  நடைபெற்று வருகிறது.  காலிறுதி போட்டியில்  வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி  131 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

அதையடுத்து அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஏற்கனவே 3 முறை இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற காலிறுதி போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்-ஐ தேர்வு செய்தது.

பங்களா தேஷின் பந்துவீச்சை அனாயசமாக சமாளித்த இந்திய வீரர்கள், அனைத்து விக்கெட்டையும் இழந்து 49.2 ஓவருக்கு  265 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி வீரர்  ஷுப்மான் கில் அதிகபட்சமாக  86 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமகா காசி ஒனிக் மூன்று விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.

அதைத்தொடர்ந்து  266 ரன்கள் தேவை என்ற நிலையில் பங்களாதேஷ் அணியினர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் சிறப்பாக இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்ட அவர்கள்,  55 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை பறிகொடுத்தனர். அதைத்தொடர்ந்து  சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க  42.1 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டையும் 134 ரன்னில் இழந்து வெளியேறியது.

இந்திய அணி பந்துவீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.