ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி வீரர்கள் அறிவிப்பு!

Must read

துபாய்:
ந்த ஆண்டுக்கான  டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான வீரர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக  இந்திய வீரர் விராட்கோலி  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒருநாள் அணிக்கான 12 பேர் கொண்ட பெயர்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இதில் இந்திய வீரர்கள் 3 பேர் இடம் பிடித்துள்ளனர்.
அதே போல் 12 பேர் கொண்ட டெஸ்ட் அணியையும் ஐசிசி அறிவித்துள்ளது.
டெஸ்ட் அணிக்கு அலைஸ்டர் குக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்தாண்டுக்கான சிறந்த ஐ.சி.சி கிரிக்கெட் நடுவராக தென்னாபிரிக்காவின் மராய்ஸ் ஏராஸ்மஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்வேக வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பெறுகிறார்.

ஒருநாள் அணிக்கான வீரர்கள் விவரம்:
விராட்கோலி (கேப்டன்)
டேவிட் வார்னர்
குயின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்)
ரோகித்சர்மா
ஏ. பி. டிவில்லியர்ஸ்
ஜோஸ் பட்லர்
மிட்செல் மார்ஷ்
ரவீந்திர ஜடேஜா
மிட்செல் ஸ்டார்க்
காகிசோ ரபாடா
சுனில் நரைன்
இம்ரான் தாஹிர்
டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்:
அலைஸ்டர் குக் (கேப்டன்)
டேவிட் வார்னர்
கேன் வில்லியம்சன்
ஜோ ரூட்
ஆடம் வோஜஸ்
ஜானி போர்ஸ்டவ்
பென் ஸ்டோக்ஸ்
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரங்கனா ஹெராத்
மிட்செல் ஸ்டார்க்
டேல் ஸ்டெய்ன்
ஸ்டீவ் ஸ்மித்

More articles

Latest article