ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக தமிழக வீரர் அஸ்வின் தேர்வு!

Must read

குவைத்,
சிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2016ம் ஆண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட்  போட்டிகளில் விளையாடிய சிறந்த ஆட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்தது.

அதில், இந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது தமிழக வீரர்  அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.
அதேபோல ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதும் அஸ்வினுக்குக் கிடைத்துள்ளது. மேலும் ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வருடம் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அருமையான விளையாடி அசத்தினார்  அஸ்வின். இதன் காரணமாக அஸ்வின்  ஐசிசி தரவரிசை பட்டியலில்  பெளலிங், ஆல்ரவுண்டர் என இரண்டிலும் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதையடுத்து தற்போது ஐசிசி விருதுகளும் அவருக்குக் கிடைத்துள்ளன.

இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி ஐசிசி அணியின் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

More articles

Latest article