ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா-வும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா-வும் செயல்படுவார்கள்.

இவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தவிர, சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel