இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை தண்டித்த ஐ.சி.சி. – பி.சி.சி.ஐ. கடும் எதிர்ப்பு

Must read

india-vs-pakistan759ஐ.சி.சி. போட்டி ஒப்பந்தப்படி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆகஸ்டு 1–ல் இருந்து அக்டோபர் 31–ற்குள் பாகிஸ்தான் பெண்கள் அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. இந்திய – பாகிஸ்தான் ராணுவ பிரச்னையை காரணம் காட்டி இந்திய அணி இந்த தொடரில் விளையாடவில்லை.

இதுதொடர்பாக, இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் சமர்பித்த அறிக்கையை பரிசீலித்தப்பின் ஐ.சி.சி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை எனவும், இந்திய பெண்கள் அணிக்குரிய தரவரிசையில் 6 புள்ளிகளை, பாகிஸ்தான் அணிக்கு வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளது. இதனால், 2017–ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி நேரடி தகுதி வாய்ப்பை இழந்துள்ளது.

ஐ.சி.சி. இந்த முடிவை திரும்ப பெறாவிட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய ஆண்கள் அணி விளையாடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை செய்துள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article