சென்னை,
ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன், அதுல்ஆனந்த் ஐஏஎஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் பிரச்சினை காரணமாக முதல்வர் ஓபிஎஸ் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார். அவரும் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போது காபந்து முதல்வராக நீடிக்கிறார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் காரணமாக தனது ராஜினாமாவை மக்கள் விரும்பினால் திரும்ப பெறுவேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் ஐஏஎஸ் மற்றும் அதுல்ஆனந்த் ஐஏஎஸ் ஆகியோர் முதல்வர் ஓபிஎஸ் தனது ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் நத்தம் விஸ்வநாதன் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் காரணமாக அப்போதைய முதல்வர் ஜெயலலலிதாவால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள்.
மேலும், ஞானதேசிகன் கடந்த 2015ம் ஆண்டு, செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழ்ந்த பேரழிவு குறித்த தவறான தகவல்கள் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டிட்கோ நிறுவன மேலாண்மை இயக்குநராக இருந்த ஞானதேசிகன் தற்போது அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குநராகவும்,
இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு அதிகாரியான அதுல் ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.