டில்லி

ன்று இந்தியா முழுவதும் ஐ ஏ எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது.

ஆண்டு தோறும் ஐ ஏ எஸ். ஐ பி எச். ஐ எஃப் எஸ் உள்ளிட்ட 24 வகையான அரசு அதிகாரிகள் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வுகளை நடத்தி வருகின்றன.  இதில் முதல் நிலை, முதன்மை, நேர்காணல் என மூன்று கட்ட தேர்வுகள் நடத்தப்பாடு அதில் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு 712 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியாகி இணையம் மூலம் மார்ச் 4 முதல் 24 வரை விண்ணப்பப்பதிவு நடந்தது.  இதற்கு 10 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்து அதில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் முதல்நிலை தேர்வு எழுதத் தகுதி பெற்றனர்.  கடந்த ஜூன் 27 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பிறகு கொரோனா அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்த முதல்நிலை தேர்வு இன்று காலை முதல் தாள் தேர்வு மற்றும் மதியம் 2 ஆம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.   இதையொட்டி 73 நகரங்களில் 2800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 77 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். 

தேர்வுக்கு முகக் கவசத்துடன் வர வேண்டும் எனவும் சானிடைசர் எடுத்து வரவேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அத்துடன் தேர்வு மையத்தில் தனிநபர் இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் தேர்வு மையத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கட்டாயம் வர வேண்டும் எனவும் யு பி எஸ் சி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.