ஜூலை 29-ல் இந்தியா வருகிறது 5 ரபேல் போர் விமானங்கள்

Must read

புதுடெல்லி:
ஜூலை 29-ம் தேதி 5 ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டாசல்ட் நிறுவனத்திடமிருந்து ரூ 59 ஆயிரம் கோடியில் 36 நவீன ரக ரபேல் போர் விமானங்கள் வாங்க 2016-ல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் புயலை கிளப்பி வந்தது. இந்நிலையில் முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் வரும் ஜூலை 29-ல் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரியானாவின் அம்பாலா விமானப்படைதளத்தில் வந்திறங்க உள்ளதாகவும், பின்னர் ஆக.20ல் நடக்க உள்ள விழாவில் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக லடாக் எல்லையில் சீனாவின் அட்டூழியத்தை ஒழிக்க ரபேல் ரக போர்விமானங்கள் பயன்படுத்திட இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில் அதி நவீன போர் விமானமான ரபேல் விமானங்கள் ஜூலை 29-ல் இந்தியா வரவுள்ளது இந்தியாவின் விமானப்படைக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article